திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெண் தோழியின் தங்கை மீது ஆசை; கூடாநட்பால் தூக்கில் தொங்கி உயிரைவிட்ட இளம்பெண்.!
நாம் பழகும் நபரின் பின்புலம் மற்றும் குணம் தெரியாமல் பழகினால், விளைவுகள் கடுமையாக இருக்கும். அதனை எதிர்கொண்டு கயவர்களின் கொட்டத்தை ஒடுக்க மனரீதியான தைரியமும் வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அறிமுகமாகும்போது வரும் தன்னம்பிக்கை, அவர்களால் பிரச்சனை ஏற்பட்டால் அதனை தீர்க்கும் வரையிலும் இருக்க வேண்டியது அவசியம்.
14 வயது தங்கை மீது ஆசை
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ் நிஷாத். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோருடன் வசித்து வந்த இளம்பெண்ணுக்கு, 14 வயதுடைய தங்கை இருக்கிறார். முதலில் 21 வயது இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்த கொடூரன், பின்னாளில் தனது கொடூரத்தை அரங்கேற்ற தொடங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: செல்பி எடுத்து வாட்ஸப்பில் அனுப்பி தம்பதி தற்கொலை.. தற்கொலை குறிப்பில் பகீர் தகவல்.!
பெண் தற்கொலை
அதாவது, கயவன் தனது பெண் தோழியின் 14 வயது தங்கையை பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். அதற்காக தனது பெண் தோழி மற்றும் அவரின் தங்கையை மிரட்டி வந்துள்ளார். தங்களை விட்டுவிடுமாறு அவர் கெஞ்சியும் பலன் இல்லை. இதனிடையே, மிகுந்த மனவேதனையடைந்த 21 வயது இளம்பெண், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நிதேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அடச்சைக்.. எச்சிலை காரித்துப்பி முகத்தில் மசாஜ் செய்த சலூன் கடை உரிமையாளர்; வாந்தியை வரவழைக்கும் பகீர் வீடியோ.!