2024 மக்களவை தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி: பிரதமருக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த வயோதிக பெண்மணி.!



PM Narendra Modi Casting His Vote 


ஏழு கட்டமாக நடைபெறும் 2024 மக்களவை தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள. இன்று மே 07ம் தேதி மூன்றாவதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத், ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு நடைபெறும் மூன்றாம்கட்ட தேர்தலில் 1340 க்கும் அதிகமான வேட்பாளர்கள் மக்களின் வேட்பாளராக களமிறங்கி இருக்கின்றனர்.

3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் விபரம்:

இந்த தேர்தலில் அசாமில் 4 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், தாத்ரா நகர், கோவாவில் தலா 2 தொகுதிகள், குஜராத்தில் 25 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகள், மஹாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்திரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 4 தொகுதிகளில் தேர்தலில் நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்:

இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, தனது சொந்த தொகுதியான குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில் இருக்கும் தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை மக்களுடன் மக்களாக எளிமையாக வரிசையில் காத்திருந்து செலுத்தினார். அங்குள்ள அகமதாபாத், நிஷான் உயர்நிலைப்பள்ளியில் தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.

பிரதமரின் அறிவுரை:

வாக்கை பதிவு செய்த பிரதமர் மோடி, மக்களை நோக்கி நடந்து வந்து குழந்தைகளுடன் பேசினார். மேலும், நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆற்றலையும் தரும்" என கூறினார். வயதான பெண்மணி ஒருவர் பிரதமரின் கைகளில் ராக்கியும் கட்டினார்.