மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மியான்மரில் சிக்கிய மகன்; தாய் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
வெளிநாட்டில் வேலை என்று சென்ற வளர்ப்பு மகன் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தாய் தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் கிளிஞ்சல் மேடு கிராமத்தில் இருக்கும் சுனாமி குடியிருப்பு, மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரின் மனைவி ஆட்சியம்மாள் (வயது 62).
தம்பதியின் வளர்ப்பு மகன் தீபமணி (வயது 28). இவர் சமீபத்தில் தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்து மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவலை அவர் குடும்பத்தினருக்கு தெரிவித்த நிலையில், மகனை மீட்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு மற்றும் ஆட்சியம்மாள் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், மகன் வீட்டிற்கு வருவானோ? இல்லையோ? என்று மனவிரக்தியில் இருந்து வந்த ஆட்சியம்மாள், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.