மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திட்டம் போட்டு திருடும் கூட்டம்.. வங்கிக்கு செல்லும் நபர்களை குறிவைத்து நூதன கொள்ளை..!
வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பியவரை, பின்தொடர்ந்து சென்று பணம் திருடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கருவடிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் ராமநாதன். இவர் லாஸ்பேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் தனது வங்கி கணக்கிலிருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டிக்குள் வைத்துக்கொண்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டிற்கு சென்று பெட்டியை திறந்து பார்த்தபோது 2 லட்சம் பணமும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அவர் லாஸ்பேட்டை காவல் துறையில் புகாரளிக்க, புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ராமநாதன் பணத்தை எடுத்துக்கொண்டு வரும் வழியில் ஒரு இளநீர் கடையில் வண்டியை நிறுத்தி இளநீர் அருந்தியது தெரியவந்தது. தொடர்ந்து வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமாக இருவர் சுற்றி தெரியும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ராமநாதன் பணம் எடுத்ததை அறிந்த இருவரும் அவர் பெட்டியில் பணம் வைப்பதை கண்காணித்து பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
மேலும், இளநீர் அருந்துவதற்காக வண்டியை நிறுத்திய நிலையில, இருவரும் பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. அத்துடன் காவல்துறையினர் பணத்தை திருடி சென்ற இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.