சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
#Breaking: அடி சக்க.. மாதம் 300 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசம் - மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!

வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்த பஞ்சாபில் 2022 தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஆம் ஆத்மீ கட்சி ஆட்சியை அமைத்துள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக பகவத் மான் இருக்கிறார். பஞ்சாப் தேர்தலின்போது ஆம் ஆத்மீ கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றவுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, "பஞ்சாப் மாநில அரசு வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சார சேவை கொடுக்க உள்ளது. இந்த திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.