திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நாயை காரோடு கட்டி இழுத்துசென்ற டாக்டர்.. கூறிய பகீர் காரணம்.! பதறவைக்கும் வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவராக இருப்பவர் தனது காரில் நாயைக்கட்டி சாலை வழியே இழுத்துச்சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அந்த நாயும் காரின் பின்னாலேயே ஓடிய நாயைநிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் காரை வழிமறித்து நாயை அவிழ்த்து விட்டுள்ளனர்.
காயத்துடன் இருந்த நாய் பின் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டது. மேலும் நாய் விலங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல்நிலையத்தில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.
A video has gone viral on social media showing a dog being made to run by his owner behind his car with the leash of the...
Posted by First India on Sunday, 18 September 2022
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தனது வீட்டருகே வசித்து வரும் தெருநாயை மருத்துவர் வேறுஇடத்திற்கு கொண்டுசென்று விடுவதற்காகா இவ்வாறான அராஜகத்தில் ஈடுபட்டு அம்பலமானது. இந்த வீடியோ வைரலாகிவரும் நிலையில், மருத்துவரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.