அயோத்தி தீர்ப்பு வழங்கிய கையோடு நீதிபதி ரஞ்சன் கோகாய் எங்கு சென்றார் தெரியுமா?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணிக்காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததையடுத்து, ரஞ்சன் கோகாய் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கு, ஆர்.டி.ஐ, ரபேல், சபரிமலை விவகாரம் உள்ளிட்ட வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் இன்றுடன் (நவம்பர் 17) அதிகாரப்பூர்வமாக நிறைவடைகிறது. ஆனால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினத்துடன் அவரது பணிக்காலம் நிறைவடைந்தது.
இந்தநிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ரஞ்சன் கோகாயி திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்துடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். திருப்பதியில் ரஞ்சன் கோகாய்க்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து காரில் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை வழிபட்டார்.