மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 வயது சிறுமி கற்பழித்து கொலை; துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளியை கைது செய்த பரபரப்பு சம்பவம்
உத்திர பிரதேசத்தில் 6 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த கொடூரனை 45 நாட்களுக்கு பின்பு துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.
உபியில் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மே மாதம் 7 ஆம் தேதி வரை காணவில்லை. அவரது குடும்பத்தினர் ராமபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சில நாட்கள் தேடிய போலீசாரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு பின்னர் தேடுதலை நிறுத்திவிட்டனர். ஆனால் சிறுமியின் குடும்பத்தினர் விடாமல் தேடுதலில் ஈடுபட்டனர்.
அதன் பயனாக கடந்த சனிக்கிழமை ஒரு பாழடைந்த பழைய கட்டிடத்தில் ஒரு சிறுமி இறந்து உடல் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர். பக்கத்தில் கிடந்த உடைகளை வைத்து இறந்தது அவர்களது குழந்தை தான் என உறுதி செய்தனர்.
அதன் பிறகு போலீசார் மீண்டும் இந்த சம்பவத்தில் தலையிட சிறுமி கற்பழித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மேலும் சிறுமியின் பெற்றோர் உதவியுடன் பக்கத்து தெருவை சேர்ந்த நாசில் தான் இதற்கு காரணம் என கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த சுடுகாட்டில் பதுங்கியிருந்த நாசிலை கைதுசெய்ய போலிசார் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நாசில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தியதில் குற்றவாளி நாசில் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் நாசிலை கைதுசெய்து விசாரணை செய்ததில் சிறுமியை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.