மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கௌரவ கொலை... தாய், சகோதரர்கள் நிகழ்த்திய கொடூரம்.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை அவரது தாய் மற்றும் சகோதரர்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் சகோதரர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் ரிங்கு என்ற 20 வயது இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர் ஜாமினில் வெளியே வந்தார்.
கௌரவ கொலை
இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த இளைஞர் மீது பழியை போடவும் தங்களது குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை போக்கவும் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமியை கொலை செய்ய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதன்படி அந்த சிறுமியை அவரது தாயார் பிரஜ்வதி மற்றும் சகோதரர்கள் நீரஜ், வினித் ஆகியோர் சுட்டு கொலை செய்துள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் மாமா மகாவீர் என்பவரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்... பிஞ்சு குழந்தையை குழி தோண்டி புதைத்த தந்தை.!!
காவல்துறை கைது
மேலும் சிறுமியை கொலை செய்த பின் அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் பலாத்காரம் செய்த இளைஞரான ரிங்கு மீது பழியை போட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்தனர். இந்நிலையில் காவல்துறையின் விசாரணையில் சிறுமியின் தாய் மற்றும் குடும்பத்தினரே அவரை கௌரவ கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் சகோதரர்கள் மற்றும் மாமா ஆகிய 4 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இதையும் படிங்க: ஃப்ரிட்ஜ்க்குள் பயங்கரம்... துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல்.!! பதற வைக்கும் சம்பவம்.!!