மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்... பிஞ்சு குழந்தையை குழி தோண்டி புதைத்த தந்தை.!!
கேரள மாநிலத்தில் 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை
நேபாள நாட்டைச் சேர்ந்த அமர் பதுர் சவுத்(45) என்ற நபர் தனது மனைவி மஞ்சு மற்றும் மகன் ரோஷன் பதுர் சவுத்(20) ஆகியோருடன் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பள்ளித்தாழம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் ரோஷனின் மனைவி பார்வதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
காவல்துறையில் புகார்
இந்நிலையில் குழந்தை பிறந்த சில தினங்களில் திடீரென மாயமானது. இது தொடர்பாக குழந்தையின் தாய் பார்வதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவன் மற்றும் அவரது பெற்றோர் கருவை கலைக்க தன்னை வற்புறுத்தியதாகவும் அதற்கு கொடுத்த மருந்துகளின் காரணமாகவே தனது குழந்தை குறை மாதத்தில் பிறந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது குழந்தையை கணவன் மற்றும் அவரது பெற்றோர் கொன்று புதைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அமர் பதுர் சவுத் அவரது மகன் ரோஷன் பதுர் அவரது மனைவி மஞ்சு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: ஃப்ரிட்ஜ்க்குள் பயங்கரம்... துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல்.!! பதற வைக்கும் சம்பவம்.!!
கொடூரமாக கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை
இந்த விசாரணையில் அவர்கள் மூவரும் குழந்தையை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து உடலை புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை மேலும் துரிதப்படுத்தி இருக்கின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: கொடூரம்... பெற்றோர் கண் முன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சிறுமி... 17 வயது இளைஞன் வெறி செயல்.!!