EMI செலுத்துவோருக்கு அடுத்த ஷாக் அறிவிப்பு?.. ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன?..! எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்.!



Reserve Bank of India Repo Prcentage Dec 2022

 

உலகளவில் உள்ள பல்வேறு நாடுகளில் நிலவிவரும் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதம் என்பது அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. ரஷியா உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து சென்றதை தொடர்ந்து உக்ரைன் - ரஷியா போர் தொடங்கி கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலையும் அதிகரித்தது. 

இதுபோன்ற பல காரணங்களால் பணவீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து செல்கிறது. பணவீக்கத்தினை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சமீபமாகவே பணவீக்கத்துடய அளவு குறைவதாக தகவல்கள் தெரியவருகிறது. 

Reserve Bank Of India

இந்த விஷயத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், டிசம்பர் மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் வேகம் குறைக்கப்படும். பண வீக்கத்திற்கு எதிரான சண்டை நிறைவடையவில்லை என அமெரிக்காவின் பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்து இருக்கிறார். 

இந்தியாவில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வந்த நிலையில், டிசம்பர் 7ம் தேதி ரிசர்வ் வங்கியின் அடுத்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதேபோல இந்தியாவிலும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.