#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
1 இல்ல 2 இல்லை..! மொத்தம் 700..! பிரஷர் குக்கரை திறந்து பார்த்த ஏர்போர்ட் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த 5 ஆம் தேதி வழக்கம் போல் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது சவுதி அரேபியாவிலிருந்து வந்த பயணி ஒருவரின் சூட்கேஸை சோதனை செய்துள்ளனர்.
அதில் வித்தியாசமாக ஏதே ஒன்று இருப்பதை உணர்ந்த அதிகாரிகள் தனியாக அந்த நபரை அழைத்து சென்று அவரின் உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.அப்போது அவரது சூட்கேஸில் பிரஷர் குக்கர் ஒன்று இருந்துள்ளது.
அந்த குக்கரை அதிகாரிகள் திறந்து பார்த்த போது அதன் அடிப்பகுதி வித்தியாசமாக இருந்துள்ளது. அதனையடுத்து சோதனை செய்ததில் குக்கரின் அடிப்பாகம் போன்று வைக்கப்பட்டிருந்த தகட்டை அகற்றியதில் 700கிராம் மதிப்பிலான தங்கக் கட்டி ஒன்று இருந்துள்ளது.அந்த தங்கத்தின் மதிப்பு தற்போது 36 லட்சம் ரூபாய் ஆகும். அதனையடுத்து அதிகாரிகள் அந்த நபரை கைது செய்துள்ளனர்.