காஷ்மீர் தாய்மண்ணுக்கு மீண்டும் வாருங்கள் - பண்டித்-க்கு ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் வேண்டுகோள்.!



rss-mohan-bhagwat-calls-to-kashmiri-pandit-about-come-h

காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டித்கள் தாய்மண்ணுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைவரும் பள்ளத்தாக்குக்கு வாருங்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மூன்று நாள் நவ்ரே கொண்டாட்டத்தின் இறுதி நாளாகிய இன்று காஷ்மீர் பண்டித்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வாயிலாக, கடந்த 1990-ல் காஷ்மீர் பண்டிதர்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னணியின் உண்மை குறித்து இந்திய மக்களுக்கே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் பண்டிதர்கள் ஒவ்வொருவரும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் தங்களின் வீட்டிற்கு வர உறுதிமொழி எடுத்துள்ளார்கள். அதனை நிறைவேற்றவேண்டிய நேரமானது தற்போது வந்துள்ளது. இந்துவாக, பாரத பக்தராக காஷ்மீருக்கு அவர்கள் திரும்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. 

Rss

கடந்த காலங்களில் இடம்பெயர்ந்து தொடர்பாக சிந்தித்துக்கொண்டு இருக்கிறீர்கள். எதிர்காலத்தில் இதுபோன்று எதுவும் உங்களுக்கு நடக்க கூடாது. கடந்த காலத்தினை போல பாதுகாப்புடன், அண்டை வீட்டாரோடு நட்புடன் வாழ வேண்டிய சூழ்நிலையை உருவாகும் பணி நடக்கிறது. உங்களை அங்கிருந்து வெளியேற்ற இயலாது.

பண்டிதர்களை வெளியேற்றுவது தொடர்பான தவறான எண்ணம் கொண்டவர்கள் கடுமையான விளைவை சந்திப்பார்கள். நாம் அனைவரும் தீவிரவாதத்தை முறியடித்து அனைவரோடும் அமைதியாக வாழ வேண்டும். நமது உறுதிமொழி விரைவில் நிரைவேறும். காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, பண்டித்கள் காஷ்மீர் வர வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.