சபரிமலை தொடர் கலவரத்தால் கோயிலுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவு.!



sabarimalai-ayyappan-kovil-kerala---tamilnadu

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வது தொடர்பாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்களால் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிலிருந்தே அங்கு தொடர் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன.  இந்நிலையில் ஓய்ந்திருந்த கலவரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

கடந்த 2-ம் தேதி கனகதுர்கா, பிந்து என்ற இரண்டு பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று முதல் தொடர் போராட்டங்கள், குண்டு வீச்சு என கேரளாவின் பல இடங்கள் போராட்டக் களமாக மாறியுள்ளது.

sabarimalai

இதுவரை 1200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 485 பேர் பேர் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்காக பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் வருகின்ற 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தற்சமயம் மகர பூஜைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் போலீஸ் கெடுபிடி, தொடர் போராட்டம் காரணமாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் நேற்று 18ஆம் படியில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் எளிதாக சுவாமி தரிசனம் செய்ததாக கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் காரணமாக கேரள அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.