சபரிமலை சர்ச்சை பெண் ரெஹானா பாத்திமா என்ன ஆனார்? இந்தவருடமும் சபரிமலை செல்ல முயற்சி!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அணைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து பல்வேறு பெண்கள் ஐய்யன் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்தனர். இதில் பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.
இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயற்சித்த பாத்திமாவை போராட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்தி அவரை திருப்பி அனுப்பினர். மேலும், அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததோடு அவரது வீடும் அடித்து நொறுக்கப்பட்டது.
இது நடந்து 1 வருடம் ஆகிவிட்ட நிலையில் இந்த வருடமும் தான் ஐய்யப்பன் கோவிலுக்கு செல்ல இருப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கேரளா காவல் துறைக்கு பாத்திமா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில், ரெஹானா பாத்திமாவிற்கு பாதுகாப்பு வழங்க முடியாது என கேரளா காவல்துறை பதிலளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் பெண்ணியவாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் சபரிமலையில் இடம் இல்லை என கேரளா அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.