"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
உங்களின் SBI வங்கிக்கணக்கில் ரூ.147.50 பிடித்தம் செய்யப்பட்டதா?.. காரணம் இதுதான்..!
மத்திய அரசின் வங்கி நிறுவனமான எஸ்.பி.ஐ., டெபிட் கார்டுகளுக்கான சேவை கட்டணத்தை ஆண்டின் தொடக்கத்தில் பிடித்தம் செய்துகொள்ளும். கடந்த ஆண்டில் ரூ.125 பிடித்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டில் எஸ்.பி.ஐ டெபிட் கார்டு வைத்துள்ளோருக்கு, அதன் கட்டணமாக ரூ.147.50 பிடித்தம் செய்துள்ளது. விசாரணையில், ரூ.125 கட்டணத்துடன் ஜி.எஸ்.டி சேர்ந்து ரூ.147 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் எஸ்.பி.ஐ டெபிட் கார்டு உபயோகிப்பாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும், எஸ்.பி.ஐ வங்கியே இவ்வாறான செயலை செய்கிறது என்றால், பிற தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் நிலை கவலைக்கிடம்தான் எனவும் கூறப்படுகிறது.