மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எஸ்பிஐ வங்கிகள் இன்று திறந்து இருக்குமா! உங்கள் சந்தேகத்திற்கு பதில் இதோ
இன்று மற்றும் நாளை 8 ,9 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் நடைபெறும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள 85,000 SBI வங்கி கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் எஸ்பிஐ வங்கி கிளைகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் SBI சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்குவது மற்றும் இணைப்பது போன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இன்று மற்றும் நாளை 8 ,9 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் நடைபெறும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவிப்புவிடுத்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் குறிப்பிட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் மற்ற வங்கிக் கிளைகள் வழக்கம்போல இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக SBI, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியை சேர்ந்த ஊழியர்கள் ஜனவரி 8ம் தேதி மட்டும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
எனவே நாடு முழுவதும், எஸ்பிஐ வங்கி கிளைகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் இதுகுறித்து வாடிக்கையாளர்கள் எந்தவித கவலையடைய வேண்டாம் எனவும் எஸ்பிஐ வங்கி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.