மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாட்ஸாப் மூலம் உங்கள் வங்கி கணக்கிற்கு பெரும் ஆபத்து ! உடனே இதை படிங்க!
வாட்ஸாப் மூலம் தேவையில்லாத மெசேஜ்களை அனுப்பி வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் மோசடி சம்பவம் அதிகமாக அரங்கேறி வருவதால், SBI வங்கி வாடிக்கையாளர்கள் விழிப்புடன் செயல்பட SBI வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்களுக்கு வாட்ஸாப் மூலம் தேவையில்லாத மெசேஜ்களை அனுப்பி OTP போன்றவற்றை எளிதில் பெற்று, வங்கி இணக்கிலிருந்து பணம் திருடும் நாச வேலையில் பல மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
வாட்ஸாப் மூலம் மெசேஜ்களை அனுப்பி வாடிக்கையாளர்களை நம்ப வைப்பது தான் அவர்களது முதல் முயற்சியாகும். பின்னர் அதன் மூலம் வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் வாட்ஸாப் மூலமே வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று விடுவர். அல்லது ஏதாவது ஒரு லிங்கினை உங்கள் வாட்ஸாப்பிறகு அனுப்பி, நீங்கள் அதனை கிளிக் செய்யும்பட்சத்தில் உங்களுக்கு தெரியாமலேயே மொபைலில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துவிடுவர். பின்னர் அந்த செயலியின் மூலம் உங்களுக்கு வரும் OTP பின்னை அவர்களால் பெற முடியும். எனவே தேவையில்லாத எந்த லிங்கை கிளிக் செய்யாதிருங்கள்.
அடுத்தது, வங்கி அலுவலர் போலவே உங்களுக்கு கால் செய்து பேசுவர். அதில், உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டானது காலாவதி ஆகிவிட்டதாக கூறி, அதனைப் புதுப்பிக்க, உங்கள் கார்டு எண், CVV எண் போன்றவற்றை கேட்டுப் பெற்றுவிடுவர். பின்னர் உங்களுக்கு மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணையும் கேட்டுப் பெற்றுவிடுவர். இப்போது உங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு பரிவர்த்தனை செய்வத்ற்கான அனைத்து தகவல்களும் அவர்களுக்கு கிடைத்துவிட்டது. அதைக்கொண்டு எளிதில் உங்கள் வங்கி கண்க்கை அவர்களால் கொள்ளையடிக்க முடியும்.
எனவே இதைப்போன்ற அழைப்புகளைப் பெற்றால், உங்கள் வங்கி தொடர்பான எந்த தகவலையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டாமென SBI வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுபோன்று உங்கள் வங்கி கணக்கானது கொள்ளையடிக்கப்பட்டால், 1-800-111109 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது 'problem' என டைப் செய்து 9212500888 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம். மேலும் ட்விட்டரில் @SBICARD_Connect மூலமும் புகார் அளிக்கலாம் என SBI வங்கி தெரிவித்துள்ளது.