தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பிற மாநிலங்களில் எஸ்.சி., - எஸ்.டி., இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்ரீம் கோர்ட்
ஒரு மாநிலத்தை சேர்ந்த எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், வேறொரு மாநிலத்தில், தலித், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகளை கோர முடியாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான பட்டியல், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதால், ஒரு மாநிலத்தை சேர்ந்த இந்த பிரிவினர், வேறொரு மாநிலத்தில், தலித், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகளை கோர முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேறொரு மாநிலத்தில், அந்த பிரிவின் கீழ், கல்வி, வேலை வாய்ப்பில் சலுகை பெறலாமா என்ற வழக்கை, அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மற்றும் நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். பானுமதி, எம். சந்தானகவுடர் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோரை உள்ளடக்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு, ஒரு மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலை அல்லது கல்வி நோக்கத்திற்காக வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த பின் அங்கேயும் அவரை தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என கூறிட முடியாது என தெரிவித்து உள்ளது.
இந்த தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதியை சேர்ந்த நபர் ஒருவர், பிற மாநிலங்களில் அதே சாதியாக குறிப்பிடப்படாத நிலையில், அவர் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டு பலன்களை கோர முடியாது என சுப்ரீம் கோர்ட்டு இன்று தெரிவித்துள்ளது.