அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு! உச்ச கட்ட பாதுகாப்பு!



security heightened in Ayodhya. cm visited yesterday

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு கடந்த நவம்பர் 9ஆம் தேதி அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயிலை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனைத்தொடர்ந்து மத்திய அரசு உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற  அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்தநிலையில் நாளை ஆகஸ்ட்  5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க உள்ளது. அதில், பங்கேற்கும் பிரதமர் மோடி, கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால், 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ayodhya

பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர். 

பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ளதால் அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் நேற்று திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.