96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஒரு இரவுக்கு ₹.25,000.. பகல் கொள்ளையா இருக்கே.?! காரணம் இதுதான்.!
தற்போது இந்தியாவில் 13 வது ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த திருவிழா இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால், மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நேற்றைய தினம் நியூசிலாந்து அணியை அரையிறுதிப்போட்டியில் சந்தித்த இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை படுதோல்வியடைய செய்துள்ளது. மேலும் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியிருக்கிறது.
இந்நிலையில் தான் இன்று கல்கத்தாவிலிருக்கின்ற ஈடர்ன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய 2வது அரையிறுதி ஆட்டத்தில், புள்ளிகள் பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றியடையும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருக்கின்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ஆகவே, அகமதாபாத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை உற்சாகப்படுத்துவதற்காக ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். எதிர்வரும் 2 நாட்களுக்கு ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் நகரத்திற்கான பயண டிக்கெட் விலை ஆகியவை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
இறுதிப் போட்டி நடைபெற இன்னும் ஒரு சில தினங்களே இருக்கின்ற சூழ்நிலையில், ஹோட்டல் அறையின் சராசரி விலை ஒரு இரவுக்கு 10,000 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அஹமதாபாத்தில் 4 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் ஒரு இரவுக்கு 1 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று கூறியிருக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியதிலிருந்து அகமதாபாத்தில் தங்கும் விடுதிகளின் விலை அதிரடியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அக்டோபர் மாதத்திற்குள் ஹோட்டல்களுக்கான டிக்கெட் விலை ஒரு இரவுக்கு 24,000 ரூபாயிலிருந்து, 2,15,000 என அதிகரித்திருக்கிறது. மேலும் அகமதாபாத் செல்வதற்கான விமான பயண சீட்டுகளின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது ஓட்டல்களின் விலை அதிரடியாக அதிகரித்து காணப்பட்ட சூழ்நிலையில், புக்கிங் டாட் காம், மேக் மை ட்ரிப் மற்றும் அகோடா உள்ளிட்ட ஹோட்டல் முன்பதிவு தளங்களிலும் ஹோட்டல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரித்திருந்தது. தற்போது அது தொடர்ந்து வருவதாக தெரிகிறது.