திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை! அலறல் சத்தம் கேட்டு ஓடியவர்களையே நடுநடுங்க வைத்த அதிர்ச்சிக் காட்சி!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு வடக்கேகாடு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் நாயர். இவரது மனைவி ராஜம்மாள் இவர்கள் இருவரும் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். பிள்ளைகள் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பரமேஸ்வரன் நாயர் உயிரிழந்த நிலையில் ராஜம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
மேலும் அவரது பிள்ளைகள் அடிக்கடி வீட்டிற்கு வந்து அவரபார்த்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் ராஜம்மாள் நேற்று மாலை தனது வீட்டில் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டு கதவு சரிவர சாத்தப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் திடீரென்று வீட்டின் உள்ளேயிருந்து ராஜம்மாளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது தெருநாய்கள் ராஜம்மாவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கடித்து குதறிக் கொண்டிருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக தெருநாய்களை அங்கிருந்து விரட்டி, ராஜம்மாவை மீட்டுள்ளனர்.பின்னர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
பொதுவாகவே கேரளாவில் தெரு நாய்கள் அட்டகாசம் மிகவும் அதிகமாக இருக்கும். அவை சாலையில் செல்லும் பெரியவர்கள் குழந்தைகள் என பலரையும் கடித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெரு நாய்களை ஒழிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.