"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
#BigBreaking:பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை செய்ய தடை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

வன்கொடுமையால் பெண்ணொருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு இருவிரல் சோதனை கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்ய மருத்துவ ஆய்வு முறைகள் மற்றும் பிற சோதனை முறைகள் அமலில் இருக்கின்றன. இதில், இருவிரல் சோதனை என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் முறையாகும். இவற்றுக்கு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே கடும் எதிர்ப்பும் நிலவி வந்தது.
இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரண்டு விரல் சோதனை நடத்தக்கூடாது. இந்த சோதனையானது ஆணாதிக்க மனோபாவத்தில் அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை என்பதால் அதனை மேற்கொள்ள கூடாது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மருத்துவமனைகளில் சோதனையின் போது பின்பற்றப்பட வேண்டும் என மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகங்கள் உத்தரவிட வேண்டும். அதனை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.