மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 13 மணிநேரம் இரயில் பயணம் செய்த மனைவி: அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் இருந்து, உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகருக்கு பெண்மணி ஒருவர் சபர்மதி விரைவு இரயில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் பயணம் செய்துள்ளார்.
கிட்டத்தட்ட 1,387 கி.மீ தூரத்தினை கடப்பதற்கு, 26 மணிநேரம் ஆகும். இந்நிலையில், சபர்மதி இரயிலில் பயணம் செய்த பெண்மணியின் கணவர் உயிரிழந்து இருக்கிறார்.
உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்ததாக கூறப்படும் நிலையில், 13 மணிநேரம் கழித்து தான் மனைவிக்கு உண்மை தெரியவந்துள்ளது. கணவர் உறங்கிக்கொண்டு இருக்கிறார் என, உயிரிழந்த கணவரின் சடலத்துடன் பெண் பயணம் செய்துள்ளார்.
ஜான்சி இரயில் நிலையம் வந்ததும், பெண்மணி தெரிவித்த தகவலின் பேரில் மருத்துவ குழுவினர் சோதனை செய்தபோது உண்மை தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.