மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 ஸ்டார் ஹோட்டலில், போதை பொருட்களுடன் உல்லாச பார்ட்டி.. பிரபல நடிகரின் மகள், எம்.பி மகன் உட்பட 125 கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
நட்சத்திர விடுதியில் போதைப்பொருள் பயன்படுத்தி, அரைகுறை ஆடைகளுடன் நடனம் ஆடி உல்லாசமாக இருந்த 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிரபல தெலுங்கு நடிகரின் மகள், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி மகன் போன்றோரும் கைதாகியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஐந்து நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நட்சத்திர விடுதியில் வார இறுதி நாட்களில் போதைப் பொருட்களுடன் பல திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள் ஆகியோரின் மகன்கள் அல்லது உறவினர்கள் போதைப் பொருளை உபயோகப்படுத்தி பார்ட்டி நடத்தி வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் நேற்று நள்ளிரவு அங்கு திடீரென காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அங்கு கொக்கைன் போதை பொருள் உபயோகப்படுத்தப்பட்டது உறுதியான நிலையில், அதனைக் கைப்பற்றிய அதிகாரிகள் அங்கு பார்ட்டியில் ஈடுபட்டிருந்த தெலுங்கு நடிகர் நாகபாபுவின் மகள் மற்றும் சிரஞ்சீவியின் உறவினரான நிகாரிகா, பிக்பாஸ் வெற்றியாளர் ராகுல், தெலுங்குதேசம் எம்.பி-யின் மகன் உட்பட 125 பேரை கைது செய்துள்ளனர்.
கைதானவர்களுள் பாரின் உரிமையாளர் மற்றும் பணியாளர்களும் அடங்குவர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவமானது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நடிகை, அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்த அவரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு முன்பு குவிந்துள்ளதால், கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.