#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காவு வாங்கிய அவதார்??.. அவதார் 2 படம் பார்த்துக்கொண்டே மாரடைப்பில் மாண்ட ரசிகர்.. திரையரங்கிலேயே பறிபோன உயிர்..!
அவதார் படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே இளைஞர் மாரடைப்பால் மாண்ட துயரம் நடந்துள்ளது. அவதார் 1ல் தைவானை சேர்ந்தவர் உயிரிழந்த நிலையில், 2022ல் இந்தியாவில் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் தி வே ஆப் வாட்டர் (Avatar The Way Of Water) திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக காத்திருந்த பல ரசிகர்களும் திரையரங்கில் சென்று படத்தை பார்த்து பூரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத், பெடப்புரம் பகுதியில் உள்ள திரையரங்கில் தனது தம்பியுடன் படம் பார்த்துக்கொண்டு இருந்த லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்பவர் மாரடைப்பால் படத்தின் பாதியில் உயிரிழந்து இருக்கிறார்.
அண்ணன் மயக்க நிலைக்கு சென்றதை கண்ட தம்பி, அவரை விரைந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது மருத்துவர்கள் உயிரிழப்பை உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் முதல் பாகத்தை பார்த்த தைவான் நாட்டை சேர்ந்த 42 வயது நபர் உயிரிழந்த நிலையில், 2022ல் இந்தியாவில் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.