திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உறங்கியபடி உயிரைவிட்ட 3 பிஞ்சுகள்; வீடு இடிந்து விழுந்ததால் நேர்ந்த சோகம்.!
தெலுங்கானா மாநிலம் நாஹர் கர்நூல் மாவட்டத்தில் உள்ள வன்பட்லா கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கூலித்தொழிலாளி ஆவார். பாஸ்கரின் மனைவி பத்மா. தம்பதிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் வசந்தி (வயது 7), பப்பி (வயது 6) என இரண்டு பெண் குழந்தைகளும், விக்கி என்ற ஒன்றரை மாத ஆண் குழந்தையும் இருக்கிறது.
இவர்கள் தங்களுக்கு சொந்தமான மண்வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்று அப்பகுதியில் பெய்த மழையினால் மண் வீடு வலுவிழந்து, இன்று உறங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் மீது விழுந்துள்ளது.
இதையும் படிங்க: டீ கொடுக்காதது ஒரு குற்றமா? மருமகளின் கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்; பதைபதைக்க வைக்கும் கொடூரம்.!
3 குழந்தைகள் பலி
இந்த விபத்தில் வீட்டில் உறங்கிய 3 குழந்தைகள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளின் தந்தை காயமின்றி தப்பிக்க, தாய் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்தே இவர்களை மீட்க முடிந்தது.
உயிரிழந்த குழந்தைகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் பயங்கரம்; இளைஞர் கழுத்தறுத்து படுகொலை.!