கூகுள் மேப்பை நம்பி வாழ்க்கையை இழந்த மாணவர்.. தாமதமாக சென்று தேர்வை தவறவிட்ட பரிதாபம்..!!
கூகுள் மேப்பை நாம் இன்றளவும் அதிகமாக பயன்படுத்துவது தெரியாத இடங்களுக்கு கூட நாம் இலகுவாக செல்ல பேருதவி செய்கிறது. ஆனால் இந்த கூகுள் மேப் சிலநேரம் நம்மை தவறான இடத்திற்கும் அழைத்துச்சென்று விடும்.
அந்த வகையில் ஒரு மாணவர் தேர்வை தவறவிட்ட சோகம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வினய் என்ற மாணவர், தனது தேர்வு மையத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தி இருக்கிறார்.
ஆனால் அந்த கூகுள் மேப் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச்சென்று விடவே, அவர் தேர்வு மையத்திற்கு தாமதமாக சென்றுள்ளார். 27 நிமிடங்கள் தாமதமாக சென்ற அவரை அதிகாரிகள் தேர்வெழுத அனுமதிக்காததால் அவர் தேர்வில் தோல்வியடையும் வாய்ப்பு ஏற்பட்டது.