மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்தரத்தில் இருந்து அதிவேகமாக வந்த ராட்டினம்...10 பேர் படுகாயம்... பதற வைக்கும் வீடியோ...
பஞ்சாபின் மொஹாலியாவில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பலவிதமான கடைகள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல குழந்தைகள் சந்தோசமாக விளையாடி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக பலர் விளையாடிக் கொண்டிருந்த ராட்டினம் திடீரென அந்தரங்கத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்த உடனே ராட்டினத்தின் ஆப்ரேடர், அதன் உரிமையாளர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களைத் தேடும் பணியும் ஒரு பக்கம் நடைபெறுகிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.
Terrifying incident at a fair in #Mohali. Several injured. More inputs awaited. @puneetpareenja reports pic.twitter.com/6irNspSr8D
— Laasiya Priya | లాస్య (@laasiyapriya) September 4, 2022