மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைகளின் அலறல்... பதறியடித்து வந்த பக்கத்து வீட்டுக்காரர்...குடும்பச் சண்டையில் சமாதானம் பேச வந்தவர் சுட்டுக்கொலை.!
ஆந்திர மாநிலத்தில் குடும்பச் சண்டையை தீர்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கூலித் தொழிலாளியை காவல்துறை கைது செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள எஸ் டி காலனி சேர்ந்தவர் செஞ்சைய்யா கூலி தொழிலாளியான இவ்வாறு மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது மது போதையில் இருந்திருக்கிறார். மது போதையில் வீட்டுக்கு வந்த அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரரான சிந்தய்யா என்பவர் செஞ்சைய்யாவை சமாதானம் செய்ய முயற்சி செய்து இருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செஞ்சைய்யா தனது வீட்டிற்குள் சென்று நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து சிந்தய்யாவை சுட்டுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சிந்தய்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த சிந்தய்யா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளி செஞ்சைய்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.