ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரம்!!.. தேர்தலுக்கு முன்பாக கட்டி முடிக்க திட்டம்..!!
ராமர் கோவில் கட்டுமான பணிகள் வரும் செப்டம்பர் மாதம் முடிவடையும் என்று ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்ம பூமி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமர் கோவில் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், திட்டமிட்ட கால கட்டத்திற்கு முன்பாக ராமர் கோவில் கட்டுமான பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடையும் என்று ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதன் மூலம் வரும் செப்டம்பர் மாதம் ராமர் கோவில் கட்டுமான பணிகள் முடிவடையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.