மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைக்கேறிய மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்..!
உத்திர பிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தினமும் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மது போதையில் வந்த ஆசிரியர் வகுப்பறையில் நிற்கக்கூட முடியாமல் மாணவர்களின் முன்னிலையில் அங்கிருந்து நாற்காலியில் அமர்ந்து தூங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் அலாக்சிங் ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். மேலும் நல்லொழுக்கம் கற்றுத்தர வேண்டிய ஆசிரியரே மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.