திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடு வாடகைக்கு கொடுத்தது குத்தமா ? பெண்ணின் பகீர் செயல்... தூக்கி ஓடியதால் கதறல்.!
வாடகை வீட்டின் உரிமையாளரின் 16 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி (வயது 38). இவர் ரங்கப் பிள்ளை வீதியில் பங்க் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா (வயது 37). இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் தங்களுடைய வீட்டில் 16.5 சவரன் தங்க நகைகள் திருடு போய்விட்டதாக கடந்த 22ஆம் தேதி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சுப்பிரமணியனின் வீட்டில் ஒரு மாத காலமாக மருத்துவ சிகிச்சைக்காக திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி என்ற பெண் மாடியில் குடியிருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தற்போது காலாப்பட்டில் நண்பர் வீட்டில் தங்கியிருந்த வளர்மதியை, சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், 'ஒரு மாத காலமாக வீட்டில் தங்கியபோது, கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். அத்துடன் சுப்பிரமணியன் தாயார் வீட்டை திறந்து வைத்து அண்டை வீட்டாருடன் பேசிக்கொண்டிருப்பார் என்பதை அறிந்துள்ளார்.
அத்துடன் கடந்த 21ஆம் தேதி இரவு 7 மணி அளவில் அவரது வீட்டு பீரோவில் 16.5 சவரன் நகைகளை திருடினேன்' என ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து வளர்மதி திருடிச்சென்று நகைகளை மீட்ட காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
மேலும், இதுபோன்று வாடகைக்கு வருபவர்களின் முழு விவரங்களையும் சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது எனவும், சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறையினர் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.