எமனை நேரில் பார்த்து வந்த இளைஞர்கள்; அலட்சியத்தால் சக்கரத்தில் சிக்கியும் காத்திருந்த அதிஷ்டம்.!



Trending Video about Bike Accident 

 

டூவீலரில் பயணம் செய்வோர் தங்களின் வாகனத்தை கனரக வாகனத்திற்கு இணையாக அதிவேகத்தில் இயக்கி வருகின்றனர். இரண்டு வாகனங்களுக்குள் புகுந்து பயணம் செய்வது, திடீரென சாலையை கடப்பது என டூவீலரில் பயணம் செய்வோர் செய்யும் சேட்டைகள் ஏராளம்.

இவ்வாறான சேட்டைகள் சில நேரங்களில் விபத்தில் முடிந்து மரணமும் ஏற்படுகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த இளைஞர்கள் குழு, அலட்சியமாக 2 வாகனத்திற்கு இடையே புகுந்து முந்திச்செல்ல முற்பட்டது. 

இதையும் படிங்க: உயிருக்கு போராடிய மனைவியை இடுப்பில் சுமந்த கணவர்; அவசர ஊர்தி கிடைக்காததால் சோகம்.!

லாரி டயருக்கு நடுவே எலியாக இருவரும் அகப்பட்டு, லாரியின் சக்கரத்தில் சிக்கவிருந்தனர். நல்வாய்ப்பு மற்றும் அதிஷ்டம் காரணமாக லேசான காயத்துடன் 3 பேர் உயிர்தப்பினர். இவர்களுக்கு பின்னால் வந்த வாகன ஓட்டியும், வாகனத்தை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இதன் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 65 வயதுடைய மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை; சிகரெட் கொடுக்க மறுத்ததால் அதிர்ச்சி செயல்.!