மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த கல்லூரி மாணவிக்கு விடிய விடிய நடந்த கொடூரம்.!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருக்கின்ற பால்கர் மாவட்டத்தில் போய்சர் என்ற பகுதியில் தன்னுடைய தாய் மற்றும் சகோதரியோடு 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். மேலும் அந்த மாணவி மும்பையிலிருக்கின்ற பாபா அணு ஆராய்ச்சி மையத்திலுள்ள தன்னுடைய குடியிருப்பில் தங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் கடந்த 15 ஆம் தேதி தன்னுடைய தந்தை வேலைக்கு சென்ற பிறகு அண்டை வீட்டில் வசிக்கும் அஜித்குமார் யாதவ் வயது 26 என்பவரின் வீட்டிற்கு அந்த கல்லூரி மாணவி சமையல் பொருட்களை கடனாக வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் வீட்டில் அஜித்தின் நண்பரான பிரபாகர் வயது 30 என்பவரும் இருந்ததாக தெரிகிறது.
சமையல் பொருட்களை கடனாக வாங்குவதற்காக வந்த அந்த கல்லூரி மாணவிக்கு அஜித்குமார் ஒரு குளிர்பானத்தை கொடுத்திருக்கிறார். எதுவும் தெரியாத அந்த கல்லூரி மாணவி, அந்த குளிர்பானத்தை வாங்கி குடித்த ஒரு சில நிமிடங்களிலேயே மயக்க நிலைக்கு சென்றார்.
இதன்பிறகு நண்பர்கள் இருவரும் இரவு முழுவதும் அந்த கல்லூரி மாணவியை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு மயக்கம் தெளிந்த பின்னர் தான் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அந்த மாணவியால் உணர முடிந்தது.
பின்னர் அதே கட்டிடத்தில் இருந்த தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு இந்த சம்பவம் தொடர்பாக அந்த கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கடந்த 16ஆம் தேதி காவல் நிலையத்தில் அந்த மாணவி வாக்குமூலமும் வழங்கியிருக்கிறார். குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் மீது அவரின் வாக்குமூலத்தினடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் அஜித்குமார்வீட்டிலிருந்து அந்த குளிர்பானத்தின் மாதிரிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் அதனை ஆய்வு செய்வதற்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரபாகர் யாதவ் மற்றும் அஜித்குமார் யாதவ் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும் மாணவியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் குற்றப்பத்திரிகையில் அந்த அறிக்கையும் ஆதாரமாக சேர்க்கப்படலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அதோடு, காவல்துறையினர் கைது செய்த இருவரையும் வரும் 20ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.