திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்; பதறவைக்கும் சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டத்தில் வசித்து வந்த நபர் பண்ணா லால். இவரின் மனைவி அனிதா. தம்பதிகளுக்கு கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிகளுக்கு 5 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
ஆண் குழந்தை வேண்டி அதிர்ச்சி செயல்
இந்நிலையில், கடந்த 2020 ம் ஆண்டு தொடர்ந்து 6வது முறையாக அனிதா கர்ப்பமான நிலையில், தனக்கு மகன் குழந்தையாக வேண்டும் என விரும்பிய பண்ணா லால், குழந்தையின் பாலினம் குறித்து அறிய அனிதாவின் வயிற்றை கிழித்து இருக்கிறார். அரிவாள் கொண்டு கர்ப்பிணி மனைவி எனவும் பாராது கொடூரம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: கார் ஒட்டியதற்கு தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாக ரூ.1000 அபராதம் விதிப்பு; பரிதவிப்பில் வாகன ஓட்டி.!
நீதிமன்றத்தில் விசாரணை
இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக அனிதா மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தாலும், கணவருக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் பண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு அம்மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இறுதி விசாரணை சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில், குற்றவாளியான பண்ணா லாலுக்கு நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: உடல் உறுப்பு செயலிழந்து கர்ப்பிணி பெண் பலி: பலாத்காரத்தால் அடுத்தடுத்து நடந்த துயரம்.!