ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தந்தை - மகள்; கழுத்தறுத்து கொடூர கொலை: குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் வலைவீச்சு.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமோர்ஹா மாவட்டம், கோத்ரா பகுதியை சேர்ந்த தங்கநகை வியாபாரி யோகேஷ் சந்திரா. இவரின் மகள் சிருஷ்டி. இன்று காலை இவர்கள் இருவரும் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அமோர்ஹா காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தந்தை - மகளுடன் இருந்த பெண் ஒருவர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆதலால், அவரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தந்தை - மகள் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.