திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Watch: காவல் ஆணையர் அலுவலகத்தில் விஸ்கி குடிக்க முயற்சி.. காந்தி ஜெயந்தி அன்றே சம்பவம் செய்த குரங்கு.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
அதன் பக்கவாட்டு பகுதியில் பை ஒன்றும் இருந்த நிலையில், அங்கு வந்த குரங்கு பையை இலாவகமாக திறந்து பார்த்தபோது, மதுபானம் ஒன்று இருந்துள்ளது.
அதனை குடிக்க முயற்சித்த குரங்கு, மூடியை திறக்க முயற்சித்தும் பலன் இல்லை. வாயால் கவ்வி பார்த்தும் பாட்டிலை திறக்க முடியவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் அதனை அப்படியே வைத்துவிட்டு, பையில் வேறு ஏதும் சாப்பிடும் பொருட்கள் உள்ளனவா? என சோதனை செய்தது. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
காந்தி ஜெயந்தி காரணமாக இன்று இந்தியா முழுவதும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில். கான்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
Happened at police commissioner's office in Kanpur, UP. pic.twitter.com/TugMvQRGth
— Piyush Rai (@Benarasiyaa) October 2, 2023