திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு செல்கிறது; புகார் சொன்ன பெண்.. நொடியில் அந்தரபல்டி.!
இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2024 மக்களவை பொதுத் தேர்தல், இன்று நான்காவது கட்ட வாக்குப்பதிவை எட்டி இருக்கிறது. காலை 7 மணிமுதலாகவே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.
4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று:
நான்காம்கட்ட வாக்குப்பதிவில் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்கன்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா உட்பட 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் மக்களின் வாக்குகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 2030-க்குள் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,00,000/-: காரணம் என்ன?.. விபரம் உள்ளே.!
வாக்கு மாற்றி விழுந்ததாக குற்றச்சாட்டு
இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி, கமர் ஜஹான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பெண்மணி, தான் சைக்கிள் சின்னத்தில் வாக்களித்ததாகவும், ஆனால், தாமரை மலருக்கு வாக்குகள் சென்றதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இதனால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட, தேர்தல் அதிகாரிகள் தேர்தலை சரியாக நடத்துவதாக உறுதி செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, பெண்மணியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிச்சென்றார். இதனால் சிறிது நேரம் வாக்குசாவடியில் பதற்ற சூழ்நிலை தொற்றிக்கொண்டது.
இதையும் படிங்க: ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 18 இந்திய பெண்கள் மீட்பு? வைரல் வீடியோவின் உண்மை என்ன?.!