#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து, 26 ஆண்டுகளாக வேலை; மொத்த பணத்தையும் கேட்கும் பள்ளிக்கல்வித்துறை.!
மோசடி செய்து ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில், கடந்த 1997ம் ஆண்டு போலியான மதிப்பெண் சான்றிதழ் வழங்கி ஜோகிந்தர் சர்மா என்பவர் ஆசிரியர் பணிக்கு சேர்ந்துள்ளார்.
இவர் கடந்த 26 ஆண்டுகளாக அரசு ஆசிரியராக பணியாற்றி, அதற்காக அரசிடம் இருந்து ஊதியமும் பெற்றுள்ளார். இந்த நிலையில், அவரின் மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் அரசிடம் இருந்து பெற்ற ஊதியம் மற்றும் சலுகை என அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள மாநில பள்ளிக்கல்வித்துறை, பணியில் இருந்தும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.