96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தலித் பெண்ணை கடத்தி கொன்று புதைத்த முன்னாள் அமைச்சர் மகன்.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு.!
22 வயது தலித் இளம்பெண் மாயமான விவகாரத்தில், மறைந்த முன்னாள் அமைச்சரின் மகன் ஆசிரமம் அருகே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவோவில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி 22 வயது தலித் பெண்மணி மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது, தலித் பெண் கடத்தப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து, இளம்பெண்ணை கடத்தியதாக ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அம்மாநிலத்தின், மறைந்த முன்னாள் அமைச்சர் பதே பகதூர் சிங்கின் மகன் ராஜோல் சிங்கை கைது செய்தனர்.
காவல் துறையினரின் தீவிர விசாரணைக்கு பின்னர், ராஜோல் சிங்கின் ஆசிரமத்திற்கு அருகே உள்ள இடத்தில் இருந்து தலித் பெண்ணின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. பெண்ணின் சடலம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.