மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளைஞரை கடத்தி ஆணுறுப்பை அறுத்து வீசிய திருநங்கைகள்; சாலையோரம் நடந்துசென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் பகுதியில், ராம்பூரில் இருந்து நராயு சாலையில் நடந்துசென்றுகொண்டு இருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை காரில் கடத்திச்சென்ற திருநங்கைகள் கும்பல், அவரின் ஆணுறுப்பை அறுத்து வீசிய பயங்கரம் நடந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர் மயக்க நிலையில் இருந்து மீண்டு, பொதுமக்களிடம் உதவிகேட்டு மருத்துவமனையில் அனுமதியாகி இருக்கிறார். சம்பந்தப்பட்ட இளைஞர் காவல் துறையினரிடம் வாக்குமூலமும் பதிவு செய்துள்ளார்.
காரில் இளைஞரை கடத்தி சென்ற கும்பல், முதலில் அவரை தாக்கி மயக்கநிலைக்கு கொண்டு சென்றுள்ளது. பின்னர், அவரின் ஆணுறுப்பு அறுக்கப்படும்போது, இளைஞர் விழித்துக்கொண்ட நிலையில், அவரை தாக்கி கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
பின்னர் அவரை காரில் இருந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ளது. சம்பவம் குறித்து புகார் அளித்ததன் பேரில், திருநங்கைகள் சவாணி, அனிதா, முஸ்கான், சிவம், சிம்ரன், கயா தேவி ஆகிய 6 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.