மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி! தயார் நிலையில் இருக்கும் ஆர்தர் ரோடு ஜெயில்
விஜய் மல்லையாவை ஒப்படைப்பது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவிற்கு கடன் வாங்கி விட்டு, அதனை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பிச் சென்றார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வர சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது.
விஜய் மல்லயாவை இந்தியா கொண்டுவர மத்திய அரசு பலவிதமான நடவடிக்கைகள் எடுத்தது. ஆனால், அரசியல் ரீதியாக தன் மீது வழக்கு தொடுக்கப்பட்டதாக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லயா முறையிட்டார். இந்நிலையில், இன்று இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் நீதிமன்றத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தீர்ப்பு வரும்பட்சத்தில் அவர், இந்தியா அழைத்து வரப்படுவார். அதே நேரம், அவருக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய ஜெயில் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட ஆர்தர் ரோடு ஜெயிலில் இரண்டு தளங்கள் உள்ளன. இந்த சிறையில் தான் விஜய் மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.