திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"கடைசியா ஒரு தடவை.." காதலிக்கு 50 முறை கத்தி குத்து..! காதலன் வெறி செயல்.!
புதுடில்லியைச் சேர்ந்த இளம் பெண் கொலை வழக்கில் அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி டெல்லியின் சஹூர் பஸ்தி ரயில்வே யார்ட் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் ரஷ்மி(25) என தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்தப் பெண் பாண்டவ் குமார் என்ற இளைஞரை காதலித்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரது காதலன் பாண்டவ் குமாரை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. ரஷ்மி மற்றும் பாண்டவ்குமார் இருவரும் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்மியை ஒருமுறை தனியாக பார்க்க வேண்டும் என அழைத்த பாண்டவ் குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது முன்னாள் காதலி ரஷ்மியை 50 முறை கொடூரமாக குத்தி படுகொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இளம்பெண் காதலனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.