மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படியும் துரோகம் செய்யலாமா? ஒரே பெயரில் எதிர் எதிர் வீட்டில் வாழ்ந்த பெண்களுக்கு நடந்த சுவாரசியம்!
துவாரகா பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் 49 வயது பெண் ஒருவரும், அதே வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் ஒருவரும் எதிர் எதிர் வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரின் முதல் பெயரும் ஒரே பெயர்தான்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் முகவரிக்கு வங்கியிலிருந்து செக் புக் வந்துள்ளது. அதனை டெலிவரி செய்த நபர், பெயரில் ஏற்ப்பட்ட குழப்பத்தினால் தவறாக எதிர் வீட்டில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அதை வாங்கிய அதே பெயரில் உள்ள அந்த வீட்டுப் பெண் அதனை எதிர் வீட்டுப் பெண்ணிடம் கூறாமல் மறைத்துள்ளார்.
இரண்டு பெண்களுமே பல வருடங்களாக நெருக்கமாக பழகி இருந்ததால் உண்மையான வங்கி கணக்கு உடைய பெண்ணின் கையெழுத்தானது எதிர்வீட்டு பெண்ணிற்கு நன்கு தெரிந்திருந்தது. இதன்மூலம் செக் புக்கில் போலியாக கையெழுத்திட்டு அந்தப் பெண் வங்கியில் சென்று 50 ஆயிரம் ரூபாய் எடுக்க சென்றுள்ளார். வங்கியில் எந்த சந்தேகமும் இல்லாமல் பணம் கொடுத்துள்ளனர்.
பின்னர் அதே போன்று நான்கு முறை அந்தப் பெண் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துள்ளார். மேலும் புதிதாக ஏடிஎம் கார்டு, பாஸ்புக் போன்றவற்றையும் வாங்கியுள்ளார். ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 15 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கியும் பணமும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் உண்மையான வங்கி கணக்கு உரிமையாளரான பெண் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். மேலும் செக் புக் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். அவரது வங்கிக் கணக்கை பரிசோதித்த அலுவலர்கள் செக்புக் வீட்டில் கொடுத்துவிட்டதாகவும், அதனை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக துவாரகா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன் பின்பு விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் அதே பகுதியில் அவரது ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டிருப்பதை மட்டுமே கண்டறிந்தனர். உண்மையில் அதனை யார் பயன்படுத்தினார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை.
அதே சமயம் அந்தப் பெண்ணின் வங்கி கணக்கினை தற்காலிகமாக பிளாக் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த எதிர் வீட்டுப் பெண் போலி கையெழுத்திட்டு செக் புக்கை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்றுள்ளார். அதே வங்கி கணக்கில் பணம் எடுக்க வந்த அவரை வங்கி அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் போலீசில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.