கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
இந்தியாவில் உருவாகி வரும் உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம்! எங்கு தெரியுமா?
இந்தியான் ஜம்மு&காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே உலகிலேயே மிகவும் உயரமான பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு&காஷ்மீரின் உடகட்டமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ரயில் போக்குவரத்து மிகவும் அவசியம். தற்போது இதற்கான பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன் பகுதி தான் செனாப் நதியின் குறுக்கே கட்டப்படும் ரயில்வே பாலம். 467 மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தின் உயரம் 359 மீட்டர். பாரீஸின் ஈபிள் டவரின் உயரமான 324 மீட்டரை விட அதிகம். மேலும் உலகிலேயே மிகவும் உயரமான ரயில்வே பாலமாக இது அமையவுள்ளது.
50 சதவிகிதத்திற்கும் மேலாக முடிக்கப்பட்ட இந்த பாலத்தின் முழு வேலையும் 2021 ஆம் ஆண்டில் நிறைவுபெறும் என்றும் இதில் முதல் ரயில்வே போக்குவரத்து 2022 ஆம் துவங்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.