திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திரையுலக பிதாமகனுக்காக ஒரு நாள், ஒன்றுகூடும் திரையுலகினர்.!
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீர் தொற்று மற்றும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார்.
மேலும் அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு பல்வேறு முக்கிய அரசியல் பிரபலங்கள், திரையுலகை சேர்ந்தவர்கள்,பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ,பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின் அரசமரியாதையுடன் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கருணாநிதியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் திங்கட்கிழமை தமிழ் திரை உலகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் திரைத்துறையை சேர்ந்த அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து ஆகஸ்ட் 13-ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் ,அதன் உறுப்பினர்களும பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சஙகம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொள்கிறது ," என தெரிவிக்கப்பட்டுள்ளது.