மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்பி எடுக்க தடை; காவல்துறையினர் அதிரடி அறிவிப்பு !!
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு 65,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை பார்ப்பதற்கு கடல் போன்று ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதை காண்பதற்காக சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அலை அலையாக திரண்டு வருகின்றனர்.
நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது என்பதால், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிப்பிடித்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை இன்று தனது முழுகொள்ளளவை எட்டி உள்ளது. மேட்டூர் அணை இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு இப்போது மீண்டும் நிரம்புகிறது.
மேட்டூர் அணை வரலாற்றில் 16 கண் பாலம் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவது இது 39-வது ஆண்டு ஆகும். நேற்று 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட போது பொதுப்பணித்துறை சார்பில் அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு 75,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.41 அடியில் இருந்து 120.05 அடியாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு 80,000 கன அடி நீர் திறக்கபட உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோர மக்கல் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் கரையோர மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இதனிடையே மேட்டூர் அணையின் 16 கண் பாலம் பகுதியில் செல்பி எடுக்கவும் காவிரி ஆற்றின் கரையில் நின்று தண்ணீர் வரத்தை வேடிக்கை பார்ப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.