அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
நாயுடன் கண்ணாம்பூச்சி விளையாடும் பூனை.. கலக்கல் வீடியோ வைரல்..!
வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு விலங்கு இருந்தாலே அது செய்யும் லூட்டிக்கும், சுட்டித்தனத்திற்கும் எல்லை இருக்காது. எந்த நேரமும் நம்முடன் கொஞ்சிக்கொண்டு மடியில் ஏறி படுத்து தனது முடிகளை உதிர்த்து, பாசத்தை வெளிப்படுத்த கை, கால் முகத்தை எச்சிலால் நனைத்து, தலையை தடவி கொடுக்கச்சொல்லி அட்ராசிட்டி செய்யும்.
ஒரு செல்லப்பிராணிக்கே இந்நிலை என்ற போதிலும், இரண்டு வெவ்வேறு செல்லப்பிராணிகள் இருந்தால் அவைகளுக்குள் செய்யும் லூட்டிகள் கணக்கில் அடங்காதவை. எந்த நேரமும் சண்டையிழுப்பது போல நடித்து, விளையாண்டுகொண்டு இருக்கும். சிறுபிள்ளைகள் வீட்டில் இருந்தால் எப்படி இருப்பார்களோ, அதனைப்போல குறும்புத்தன அன்புடன் சுற்றி வரும்.
Can’t stop laughing.. 😅 pic.twitter.com/bt3COZ7oUb
— Buitengebieden (@buitengebieden_) January 23, 2022
இந்த நிலையில், வீட்டில் உள்ள பூனை ஒன்று, நாய் உறங்கும் போது அதன் அருகே சென்று நாயை எழுப்புகிறது. நாய் எழுந்து பார்க்கும் போது, ஷோபாவின் அடியில் தன்னை மறைத்து வைத்து பூனை நாயுடன் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.