வாழ்நாளை நிறைவு செய்யும் பனை எப்படி இருக்கும் தெரியுமா?.. ஆச்சர்யமூட்டும் தகவல் இதோ..!
தமிழகத்தின் மாநில மரமாக உள்ள பனைமரம், தமிழகமெங்கும் பரவலாக காணப்படுகிறது. இது தனிநபரால் பயிரிடப்படாமல், இயற்கையாக வளர்ந்தவை ஆகும். இந்த பனையில் 34 வகைகள் உள்ளன. பனையை மரம் என்று கூறினாலும், ஆய்வாளர்கள் அதனை புல் வகை என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் உள்ள 10 கோடி பனை மரங்களில், 5 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சேலம், நாமக்கல், சென்னை, செங்கல்பட்டு மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இவை அடர்த்தியாக காணப்படுகின்றன.
பனைமரத்தில் இருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி, கள் போன்றவை கிடைக்கிறது. பனையின் ஓலைகள் பலவகைகளில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஒருபனை மரம் வளர்ந்து முதிர்வடைய 15 வருடங்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில், அதன் மொத்த வயது 100 வருடத்திற்கும் மேல் இருக்கும்.
இவ்வாறாக 100 வருடங்களை கடந்த பனைமரம் தனது வாழ்நாட்களை முடித்துக்கொண்டதற்கான அடையாளமாக, அதன் மீது பூக்களை பதறவைக்கும். அதுவே பனைமரத்தின் இறுதி தருணத்தை உணர்த்துகிறது. பனைமரமொன்று தனது வாழ்நாளை முடித்துக்கொள்வது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.